Monday, March 12, 2007

இலக்கணப் பிழைகள்

நாம் எல்லோரும் தமிழில் எழுதுகிறோம். அவ்வப்போது நிறைய இலக்கணப் பிழைகளைச் செய்கிறோம். நமக்கே தெரியாது அவை பிழைகள் என்று.

சமீபத்தில் தமிழண்ணல் எழுதிய இலக்கண நூலைப் படித்த பிறகு நம்முடைய ஞானசூனியம் எவ்வளவு என்று புரிந்தது.

ஒற்றுப் பிழைகள் பற்றிய சில உதாரணங்கள்

கையைத் தட்டு த் வரும். கைதட்டு த் வராது
சிலையைச் செய் ச் வரும் சிலைசெய் ச் வராது
ஆத்தியைச் சூடி ச் வரும் ஆத்திசூடி ச் வராது

*

நகர னகர எழுத்துகள்

இயக்குர் சரி. இயக்குர் தவறு

*

செல்வர் சரி. செல்வந்தர் தவறு

*

நூல்கள் சரி. நூற்கள் தவறு (இது நான் அடிக்கடி செய்யும் தவறு)

*

adaiyar, periyar, palar, kayathar

அடையாறு, பெரியாறு, பாலாறு, கயத்தாறு

(அடையார், பெரியார், பாலார், கயத்தார் தவறு)

(தொடரும்)

25 comments:

சிவபாலன் said...

உன்னத சேவை!!

வாழ்த்துக்கள்!!

(வாழ்த்துக்கள் சரியா? தவறா? என்றும் சொல்லிவிடுங்கள்)

சிந்தாநதி said...

வாழ்த்துக்கள் குறித்த சந்தேகம் எனக்கும் அடிக்கடி தோன்றுகிறது. ஆனால் இதுவரை தீரவில்லை.

வல்லின விதிப்படி ஒற்றுமிகும். ஆனால் பன்மை விதி சரியாக தெரியவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக நன்று!
அடடா??எவ்வளவு பிழைகளை விட்டுள்ளோம்.

து. சாரங்கன் / Saru said...

செல்வந்தர் தவறா? எனென்று சொல்லுங்களேன்.

குமரன் (Kumaran) said...

//செல்வர் சரி. செல்வந்தர் தவறு

*

நூல்கள் சரி. நூற்கள் தவறு (இது நான் அடிக்கடி செய்யும் தவறு)
//

சிந்தாநதி, இவற்றிற்கான விளக்கத்தைச் சொல்லுங்கள். இவை தவறு தான் என்றால் திருத்திக் கொள்ள வேண்டும்.

சிந்தாநதி said...

செல்வரைக் குறிக்கும் வடசொல் தன்வந்த என்பது. அதை தனவந்தர் என்று கூறுவதில் இருந்து மருவி வந்தது செல்வந்தர்.

இலக்கணப்படி நெடிலுக்குப் பின் திரிபு ஏற்படாது. கால்கள், வேல்கள், சால்கள் போலவே நூல்கள்.

கற்கள், பற்கள் என குறிலுக்குப் பின் திரியும்.

விளக்கம் கேட்டதற்கு நன்றி. அது இன்னும் என்னை ஆழக் கற்க உதவியது.

ரவிசங்கர் said...

கருத்துகள், கருத்துக்கள் - இப்படி க்கள், கள் வரும் இடங்களில் எது சரி என்பது எனக்கும் குழப்பம் தான். தெரிந்தவர் சான்றுடன் இலக்கண விதியை விளக்குங்கள்.

சிந்தாநதி - வெறும் பிழைகளை சுட்டிக்காட்டாமல் அதற்குப் பின் உள்ள விதிகளையும் கொஞ்சம் முயற்சி செய்து தொகுத்துத் தந்தால் ஒத்த பல பிழைகளையும் தவிர்க்கலாம்.

நூட்கள் என்பது சரியா?

ரவிசங்கர் said...

சிந்தாநதி - நீங்கள் சொல்வதை வைத்து நூட்கள் பிழை என்று நினைக்கிறேன்.

அப்புறம், இந்த இயக்குநர்-இயக்குனருக்கான விதி என்ன? பல இடங்களில் இந்த ந, ன குழப்பம் வருகிறது..

துளசி கோபால் said...

வாழ்த்துக்கள் சரின்னும் வாழ்த்துகள்தான் சரின்னும் ஒரு குழப்பம் இருக்கு.
நம்ம சொல்லின் செல்வர் முந்தி ஒரு பதிவு போட்டுருந்தார்.

அதனாலே துளசி எழுதுவது இப்படி வாழ்த்து(க்)கள்.

'க் வேணுமுன்னா வச்சுக்கோங்க வேணாமுன்னா எடுத்துருங்க'

போகட்டும்.... புது ப்ளொக்குக்கு வாழ்த்து(க்)கள்.

ரவிசங்கர் said...

துளசி கோபால் - வாழ்த்துக்கள்னு தான் பெரும்பாலான இடங்கள்ல பார்த்திருக்கேன்.

ஆனா, இந்த வாழ்த்து(க்)கள் யோசனை ஒத்து வராது. அப்புறம், தமிழம்மா (1)00/100னு மதிப்பெண் கொடுத்துட்டாங்கன்னா :)

எது சரின்னு கண்டுபிடிப்போம் :)

Nakkiran said...

செல்வர்/ செல்வந்தர் விளக்கம், ஆச்சரியம் அளித்தது.. எவ்வளவு நாட்கள் தவறாய் எண்ணியுள்ளோம்...


//இலக்கணப்படி நெடிலுக்குப் பின் திரிபு ஏற்படாது. கால்கள், வேல்கள், சால்கள் போலவே நூல்கள்.//

ரவிசங்கர் கேட்டுள்ளபடி,
நாள்கள், நாட்கள் கொஞ்சம் விளக்கமுடியுமா?

ரவிசங்கர் said...

நக்கீரன் -

//நாள்கள், நாட்கள் கொஞ்சம் விளக்கமுடியுமா?//

சுவையான எடுத்துக்காட்டு தந்தீர்கள். நெடில் விதி இடிக்கிறது போல் இருக்கிறதே? இல்லை, நெடிலை அடுத்து வரும் லகரத்துக்குத் தான் இந்த விதியா?

சிந்தாநதி...

வைசா said...

பயனுள்ள பதிவுகள். தொடர்ந்து நல்ல தகவல்களைக் கொடுப்பீர்களென எதிர்பார்க்கிறேன்.

வைசா

சிந்தாநதி said...

இயக்கினன், ஓட்டினன், நடத்தினன் என்பவை வினைச்சொற்கள். அவற்றைப் பெயர்ச்சொற்களாக்கும்போது இயக்குபவன், ஓட்டுபவன், நடத்துபவன் என்பவை இயக்குநன், நடத்துநன், ஓட்டுநன் என்றே வரும்.

//இலக்கணப்படி நெடிலுக்குப் பின் திரிபு ஏற்படாது. கால்கள், வேல்கள், சால்கள் போலவே நூல்கள்.

கற்கள், பற்கள் என குறிலுக்குப் பின் திரியும்.//

இது நெடிலை அடுத்து வரும் லகரத்திற்கான திரிபு விதி மட்டுமே.

//நாள்கள், நாட்கள் கொஞ்சம் விளக்கமுடியுமா?//

பெயர்ச்சொல் பன்மையில் நெடிலை அடுத்து வரும் ளகரம் டகரமாக திரியும்.

நாள்+கள்=நாட்கள்
வாள்+கள்=வாட்கள்

சிந்தாநதி said...

வாழ்த்துக்கள், கருத்துக்கள் இவற்றுக்கான தீர்வு இன்னும் நான் தேடியும் கிடைக்காமல் இருக்கிறது

ரவிசங்கர் said...

தமிழ் விக்கி உரையாடல் ஒன்றில் பேராசிரியர் C.R.செல்வகுமார் சொன்னது கீழே -

"பலருக்கும் குழப்பம் தருவது எழுத்துக்கள் என்று எழுத வேண்டுமா, எழுத்துகள் என்று எழுத வேண்டுமா என்பது. கள் என்பது ஒரு தனிச் சொல் இல்லை, பன்மை குறிக்கும் பின்னொட்டு என்று கொள்வோர், எழுத்துகள் என்பர். உகரத்தில் முடிவதால் ககர ஒற்று (க்கன்னா) சேர்க்கவேண்டும் என்பர் சிலர். இன்று இந்த இரண்டு வழக்கும் ஏற்புடையது என்பது இலக்கணம் அறிந்தவர்களின் கருத்து. எனவே வாழ்த்துக்கள், வாழ்த்துகள், பாராட்டுகள், பாராட்டுக்கள் எல்லாமே சரியானது. "

தென்றல் said...

பள்ளியில படிக்கிறப்ப ஏன் இலக்கண வகுப்பெல்லாம் 'கட்' அடிச்சேனு இப்ப வருத்தபட வேண்டி இருக்கு...
(கண் கெட்டதுக்கப்புறம் சூரியன்....)

அருமையான பதிவு, சிந்தாநதி! வாழ்த்துகள்..!

/வாழ்த்துக்கள், வாழ்த்துகள், பாராட்டுகள், பாராட்டுக்கள் எல்லாமே சரியானது/
விளக்கத்திற்கு நன்றி, ரவிசங்கர்!

பாலாஜி said...

இயக்குனர் - தவறு, இயக்குநர் - சரி.

ஒரு சொல்லுக்கு இடையில் 'ந' கரம் வருவது சரியா ??

ரவிசங்கர் said...

ஒரு சொல்லுக்கு இடையில் ந வரக்கூடாது என்று இருப்பதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டு - ஓநாய்

பாலாஜி said...

எந்தெந்த இடங்களில் ந வரவேண்டும் என்று ஏதேனும் இலக்கணம் இருக்கின்றதா ???

mutthusamy said...

ஐயா,

ஒரு எழுத்து சேர்க்கையில் ஒரு சொல்லின் மெய் எழுத்தோடு மெய் எழுத்து வருமா? உதாரணம்: தமிழ்ச் செம்மொழி. இப்படியாக எழுதும்போது இரண்டு சொற்களையும் இடைவெளி இல்லாது எழுத வேண்டுமா? உதாரணம்: தமிழ்ச் செம்மொழி என்பதற்கு பதிலாக தமிழ்ச்செம்மொழி.

நன்றி.

வேல்முருகன்

mutthusamy said...

ஐயா,

ஓர் எழுத்து சேர்க்கையில், ஒரு சொல்லின் கடைசி எழுத்து மெய் எழுத்தாக இருப்பின் அதன் அடுத்து மெய் எழுத்து வருமா?
உதாரணம்:தமிழ்ச் செம்மொழி.

அதுபோல், தமிழ்ச் செம்மொழி என்று எழுதவேண்டுமா அல்லது தமிழ்ச்செம்மொழி என்று சேர்த்து எழுத வேண்டுமா?

உங்கள் பணி அருமை. பயனுள்ளவை.

நன்றி.

மு. வேல்முருகன்

sivamohan said...

வணக்கம்,

வெள்ளை சேலை என்பது சரியானதா இல்லை வெள்ளைச்சேலை என்பது சரியானதா? இதற்கான இலக்கண விளக்கம் தாருங்கள்

நன்றி
மோகன்

Mohan Sivanandan said...

வணக்கம்,

வெள்ளை சேலை என்பது சரியானதா இல்லை வெள்ளைச்சேலை என்பது சரியானதா? இதற்கான இலக்கண விளக்கம் தாருங்கள்

நன்றி
மோகன்

Anbazhagan Ramalingam said...

ஐயா ரவி-இரவி, லட்சுமணன்-இலட்சுமணன்,ராமாயணம்,லட்சுமி-இலட்சுமி,லட்சியம்-இலட்சியம் ...எனது சந்தேகம் இ சேர்ப்பது என்ன இலக்கண விதி?