Monday, March 12, 2007

பதற்றத்தில் வரும் தவறு

எல்லையில் பதற்றம் சரி, எல்லையில் பதட்டம் தவறு.

பதறுதல்,பதறினான், பதறிப் போனாள்.

பதட்டம் பொருளற்றது. பத்திரிகைகள் பல இப்போதும் பதட்டம் என்றே எழுதி வருகின்றன.

ஊருக்குள் கலவரம் வெடித்தது; பதட்டம் நீடிப்பு என்பது தவறு

ஊருக்குள் கலவரம் வெடித்தது; பதற்றம் நீடிப்பு என்றே எழுத வேண்டும்.

*

கலவரத்தில் பலி 30 ஆக உயர்வு

விபத்தில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்வு

இது நாம் செய்தித்தாள்களில் அன்றாடம் காணும் செய்தி.

எண்ணிக்கை என்பது என்ன? அது எப்படி உயரும்?

அது என்ன நீட்டல் அளவா உயர்வதற்கு? எண்ணிக்கை கூட வேண்டுமே தவிர உயரக்கூடாது.

கலவரத்தில் பலி 30 ஆக கூடியது

விபத்தில் சாவு எண்ணிக்கை 12 ஆக கூடிவிட்டது.

*

என்னைப் பொறுத்தவரை, இந்த கருத்தைப் பொறுத்தவரை என்று இப்போது "பொறுத்தவரை" என்ற சொல்லைப் பயன்படுத்து கிறோம். இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப் படவில்லை.

as far as india is concerned என்பது போன்ற ஆங்கிலப் பதத்துக்கு பெயர்ப்பாக இது உருவாகி இருக்கலாம்.

இதன் பொருள் பொறுப்பு என்ற பதத்திலிருந்து வருகிறது. எனவே பொறுத்தவரை என்பது சரி. சிலர் இதை பொருத்தவரை என்று பயன்படுத்துகின்றனர். இது பொருட்பிழை தரும்.

10 comments:

ரவிசங்கர் said...

பொறுத்தவரை, பொருத்தவரை - இந்தக் குழப்பம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

எண்ணிக்கை உயர்வு, கூடுதல் - இது போன்றவை எல்லாம் பலரும் சிந்தித்துப் பார்க்காதவை. நீங்கள் சுட்டிக் காட்டியதால் நினைவு வைத்துக் கொள்வேன்.

நீங்கள் வைத்திருக்கும் இலக்கண வழிகாட்டி நூலில் இது போன்று எடுத்துக்காட்டுக்கள் நிறைய இருந்தால் அவ்வப்போது தாருங்கள். ஒவ்வொரு இடுகையிலும் நூலின் பெயரையும் உசாத்துணை (reference) ஆகக் காட்டுவது விரும்பத்தக்கது.

சாத்தான் said...

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி 'பொருத்தவரை'தான் சரி என்கிறது. இந்த அகராதியைப் பின்பற்றுவது நல்லது என்று நினைக்கிறேன்.

Boston Bala said...

சென்னபட்டினம் - ஏன் 'ப்' கிடையாது? ஒற்று மிகாதா!?

ரவிசங்கர் said...

சென்னப்பட்டினம்னு தான் வரணும். பிழை விட்டிருக்கிறார்கள்.

உண்மைத் தமிழன் said...

கரீக்ட்டு வாத்யாரே.. கரீக்ட்டு.. நீ சொன்னது அல்லாமே ரைட்டுதான். ஆனா பாரு நம்மாளுக தமிழை எப்படியெல்லாமோ கொன்னு எடுக்குறானுகோ.. இப்ப என்னையவே எடுத்துக்கோ.. எந்த இடத்துல 'ப்' போடணும்.. எந்த இடத்துல 'த்' போடணும்னு தெரியவே தெரியாது.. ஆனாலும் சும்மா அல்லாம் தெரிஞ்ச மாதிரி பீலா வுட்டுக்கின்னு ஆபீஸ்ல பொழுதை ஓட்டிக்கின்னு கீரேன்.. அதுக்கொரு கிளாஸ் எடுத்திரேன்.. புண்யமாப் போகும்..

பொன்ஸ்~~Poorna said...

சென்னைப் பட்டினம் என்று வரணும்.. தெலுங்கு பேரு தானே.. அதான், ஒற்றெல்லாம் யோசிக்கலை..

தமிழ்நெஞ்சம் said...

இந்த வலைப்பூவின் முகவரியை புக்மார்க் செய்துவிட்டேன். அடிக்கடி படித்து அறிவுவிருத்தி செய்துகொள்வேன்.

நன்றிகளுடன் நானே.

ரவிசங்கர் said...

வணக்கம் தமிழ்நெஞ்சம். தொடர்புடைய பல பதிவுகளிலும் மறுமொழி இட்டு ஊக்கமளித்ததற்கு நன்றி. இந்தப் பதிவு அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவது இல்லை :(

Sivakumar said...

மிகயருமையான இலக்கணச்சிந்தனைகள். நான் நிறைய கத்துக்க விருப்பபடுறேன். இக்காலத்தில் நிறையபிழைகள் இடம்பெறுகிறது. அதை எடுத்துக்காட்டவேண்டும்.
ஒரு வேண்டுகோள் இருச்சொல்லுக்கு புணர்சியை பயன்படுத்தினால் அச்சொற்களை சேர்ந்தேயெழுதுவோம். ’இந்தச் சொல்’ அல்ல ‘இந்தச்சொல்’.

Sivakumar said...

பண்றிக்குப்பதிலாக பண்டியென்று திட்டுவாங்க. றகரம் சிலயிடங்களில் டகரமாக மாறுகிறது. அது பேச்சித்தமிழில் மட்டுமானு தெரியால